Monday, June 04, 2007
Melappalayam Thirunelveli Temple Kumbabishekam - Gods appear as Symbol Painting in Water
சுவாமி சிலைகளைப்போல நீரில் மூலிகைப்படலம்
திருநெல்வேலி, ஜூன் 4: திருநெல்வேலி அருகே கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதிதாக வடிக்கப்பட்டு தண்ணீரில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளைப்போலவே மூலிகைப் படலம் நீரில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலப்பாளையம் அருகே கீழமுன்னீர்பள்ளத்தில் ஸ்ரீபரிபூரண கிருபேஸ்வரர் கோயில் உள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
களக்காடு அருகே கருவேலன்குளத்தில் 9 நவகிரகங்கள், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், விநாயகர் கல் சிலைகள் வடிக்கப்பட்டன. இந்தச் சிலைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன.
கோயிலில் இச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பு தானிய வாசமும், அதைத் தொடர்ந்து 41 நாள்கள் பல்வேறு மூலிகைகளால் அபிஷேகமும் செய்யப்பட்டன.
ஜல வாசத்திற்காக கடந்த 30-ம் தேதி ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதனுள் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் தண்ணீர்த் தொட்டியில் உள்ள சுவாமி சிலைகளை பார்த்தபோது, ஒவ்வொரு சிலைகளின் மேல் தண்ணீரில் மூலிகைத் துகள்கள் அதே சிலை வடிவில் மிதந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment