Monday, June 04, 2007

Subramaniya Bharathiyar in Karnataka Toilet - Symbol for Bathroom in Kannada - Gents Restroom

 
Posted by Picasa


அடையாளம் அல்ல, அவமானம்!

From Monday Dinamani
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070603114047&Title=Tami...

சென்னை, ஜூன் 4: தேச ஒருமைப்பாட்டின் மூல மந்திரத்தை முழங்கிய மகாகவி
பாரதியை ஒரு கழிப்பறையின் அடையாளச் சின்னமாக வைத்திருப்பது எவ்வளவு பெரிய
கொடுமை?

கர்நாடகத்தின் திம்பூர் மாவட்டத்தில் உள்ள கிப்னஹல்லி கிராஸ் என்ற
இடத்தில் இருக்கிறது மயூரா ஹோட்டல். மைசூரில் சுற்றுப் பயணம்
மேற்கொள்ளும் பெரும்பாலான பயணிகள் புழங்கும் இடம். அங்கே உள்ள கட்டணக்
கழிப்பிடத்தில்தான் ஆண்கள் பகுதியின் அடையாளமாக முண்டாசு, முறுக்கிய
மீசையுடன் பாரதியின் படத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள்.

தேசியகவிக்கு நேர்ந்திருக்கும் இந்த அவமானம் குறித்து கட்டணம்
வசூலிப்பவரிடம் கேட்டால் "இவரை யாரென்றே தெரியாது. ஆண் என்று
அடையாளப்படுத்துவதற்காக வரைந்திருக்கிறோம்' என்ற பதில்தான் கிடைக்கிறது.
அது தனியார் நடத்தும் கழிப்பிடம் என்பதும் தெரியவந்தது.

ஒருவேளை கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தவருக்கு நிஜமாகவே பாரதி பற்றித்
தெரியாமல் இருந்திருக்கலாம். வரைந்த ஓவியருக்கும் காண்ட்ராக்டருக்கும்கூட
தெரியாமல் இருந்திருக்கலாம்.

அந்த இடத்தைக் கடந்து செல்லும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும்,
அறிஞர்களுக்குமா அவரைத் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் கேள்வி.

இன்று பாரதிக்கு நேர்ந்த அவமானம் நாளை ரவீந்திரநாத் தாகூருக்கும்
தெலுங்கு கவி ஸ்ரீஸ்ரீக்கும், மலையாளக் கவிஞர் வள்ளத்தோளுக்கும்.. ஏன்...
கர்நாடக மகாகலைஞர்களான மாஸ்திக்கும் குவெம்புவுக்கும் அடுத்த மாநிலத்தில்
நேராது என்பது என்ன நிச்சயம்? பாரதியை தமிழ்க் கவியாக மட்டும் கணக்குப்
போட்டு செய்த அவமதிப்பு இது என்றால் அது பாரத தேவியின் முகத்திலேயே கரி
பூசும் செயல் அல்லவா?

தேசியக் கவி பாரதி எனத் தெரிந்தே அவரை அவமானப்படுத்துகிற வகையில்
செய்திருப்பார்களேயானால் அது மிகுந்த கண்டனத்துக்குரியது.
---------------------------------------------------------------------------------
More updates from Today's Dinamani:

நெஞ்சு பொறுக்குதில்லையே...
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070604154916&Title=Tami...

சென்னை, ஜூன் 5: கர்நாடக மாநிலத்தில் கழிப்பறை ஒன்றில், ஆண்களின்
அடையாளச் சின்னமாக மகாகவி பாரதியின் படம் வரையப்பட்டிருப்பதற்கு அரசியல்
கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளனர்.

உடனடியாக படத்தை கழிப்பறையில் இருந்து அழித்துவிட்டு, இச் செயலைச்
செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள்
கோரியுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து:
----------------------------
செய்தி கண்டு அதிர்ந்து போனேன். மாறிமாறி வந்தன வெட்கமும் துக்கமும்.
அறிந்து செய்திருந்தாலும் அறியாமல் செய்திருந்தாலும் இது மன்னிக்க
முடியாத பிழை.

கழிப்பறைச் சுவரில் மகாகவியின் உருவத்தைப் பொறித்திருப்பது சமூகப்
பிழையோடு கூடிய சரித்திரப் பிழை. வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும் அறியாதார்
செய்த தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது
உள்நோக்கம் உள்ளதோ என்று கவலைகொள்ள வைக்கிறது.

இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா?
அந்த மீசைச் சூரியனை - தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா?
உடனே அழிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் தன்னிலை விளக்கம் தர
வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால் கவிஞர்கள்
திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறல் என்று கொண்டாலும்
சரி; எச்சரிக்கை என்று கொண்டாலும் சரி.

பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன்:
----------------------------
இது தமிழ் மக்களின் உணர்வை அவமதிப்பதும் தமிழ்ப் பெரும் கவிஞனை
அவமதிப்பதும் ஆகும்.

இந்த அவமதிப்பை உடனே நீக்க கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும். மேலும் இக்
கண்டனத்துக்குரிய செயல் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கத் தயங்க
மாட்டார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
----------------------------
கொடுமையிலும் கொடுமை இது. "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட
மனிதனை நினைந்துவிட்டால்' என்றுதான் ஆத்திரமும் கவலையும் எழுகிறது.

திருவள்ளுவர் சிலையைக் கோணிப் பையில் மூடி வைத்தனர். காவிரியில்
தமிழகத்தின் உரிமையைப் பறித்தனர். இந்த தொடர் கொடிய சங்கிலி நிகழ்வுகளில்
இன்றைக்குப் பாரதியார் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கவிஞன் குவெம்புக்கு
இதுமாதிரி நேர்ந்தால் கர்நாடகத்தினர் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?
பாரதியைச் சிறுமைப்படுத்தும் இந்த அநாகரிக செயல், திட்டமிட்டு
கேளிக்கையாகச் செய்யப்பட்டு உள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

காங். தலைவர் குமரி அனந்தன்:
----------------------------
அவமானத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆண்மையின் சின்னம் பாரதி.
அவன் வீரத் திருவுருவமாக காட்சியளிக்கும் படம் கர்நாடக சட்டப் பேரவையில்
வைப்பதற்கு தகுதி படைத்தது. அந்த படத்தைக் கழிப்பறையில் இருந்து
எடுப்பதோடு நடந்துவிட்ட செயலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம்
தெரிவிக்க வேண்டும்.

2 comments:

Anonymous said...

பாரதிக்காக தமிழக அரசியல்வாதிகள் குரல் கொடுப்பது குறித்து சந்தோஷம்..
ஆனால், "புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாரதியே பாடிய அந்த
கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த தேரெழுந்தூர் தமிழ் நாட்டிலேயே, தஞ்சை
மாவட்டத்திலேயே தான் உள்ளது. அது எப்படி இருக்கிறது? இந்தப் பதிவைப்
பாருங்கள்.

கர்நாடக அரசியல்வாதிகளையும், ம்க்களையும் கேள்வி கேட்க இவர்களுக்கு என்ன தகுதி
இருக்கிறது?

"கழிப்பிடமாக கம்பர் பிறந்த இடம்" - புதுவை சரவணனின் நேரடி ரிப்போர்ட்
http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_26.html

கம்பன்
வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்' என்பார்கள். ஆனால் மயிலாடுதுறைக்கு அருகில்
உள்ள கவிச்சக்கரவர்த்தி பிறந்த தேரழுந்தூரில் இன்று அவரது வீடும் இல்லை. கவிபாட
கட்டுத்தறியும் இல்லை. கம்பர் பிறந்த இடமாக இந்தியத் தொல்லியல் துறை
முள்வேலியிட்டு அடையாளப்படுத்தி உள்ள இடம் குப்பைமேடாகவும் மலம், சிறுநீர்
கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கம்பர் மேடு என்று அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படும் அந்த இடத்தைத் தவிர,
மற்ற எல்லா இடங்களும் முஸ்லிம்கள் வசம் உள்ளது. கம்பர் பிறந்து, வாழ்ந்து,
கவிதைகள் பல புனைந்த அவரது வீட்டிற்கு அருகில், மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது.
இந்த மசூதி தவிர அந்த ஊரில் பல மசூதிகள் உள்ளன. அவற்றில் சில மிக
பிரம்மாண்டமானவை. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான தேரழுந்தூர் பெருமாள்
கோயில், மேலையூர், கீழையூர், தொழுதொழாங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட
மிகப்பெரிய ஊராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார்
தேரழுந்தூரில் ஷ்ரீரங்கநாதனாகவும், ஷ்ரீகோவிந்தராஜனாகவும், ஷ்ரீதேவாதி
ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45
பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர்
எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில்
உள்ளது.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித்
தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம்
கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை ஒட்டி பிரம்மாண்டமான இரண்டடுக்கு அரபிக்
கல்லூரி ஒன்று உள்ளது.
தேரழுந்தூரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருப்பதால், கம்பர் மணிமண்டபத்தை
அவர்கள் பொழுதுபோக்கிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தேரழுந்தூரில் உள்ள
முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பாலானோர் டிரைவர்களாக உள்ளனர். இவர்கள் இரவில்
தங்களது வாகனத்தை மணிமண்டபத்தில் நிறுத்திவிட்டு மது அருந்துவது, விலை
மாதர்களோடு சல்லாபிப்பது போன்ற இரவுக் களியாட்டங்களை தினந்தோறும் அந்தப்
புனிதமான இடத்தில் அரங்கேற்றி வருகிறார்கள்.
நாங்கள் அங்கு சென்றபோது கம்பர் மணிமண்டபத்தில் திருமண மண்டபம் கட்டும் பணி
நடந்து கொண்டிருந்தது. அங்கு இரவு காவலாளியாக பணிபுரியும் உள்ளூரைச் சேர்ந்த
ஒருவரிடம் நாங்கள் பேச்சுக் கொடுத்தோம். "முன்பு இங்கு வாட்ச்மேன் கிடையாது.
முஸ்லிம் டிரைவர்கள் இங்கு பண்ணாத அட்டூழியம் இல்லை. நான் இரவு வாட்ச்மேனாக
வந்தவுடன் மணிமண்டபத்தை சுத்தம் செய்தேன். அங்கிருந்த காலி மது
பாட்டில்களையும், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளையும்,பெண்களின் உள்ளாடைகளையும்,
அவர்கள் செய்த அசிங்கத்தையும் சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது" என்று
வேதனையுடன் கூறினார்.

கம்பர்
மணிமண்டபமும், அரபிக் கல்லூரியும் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவை முஸ்லிம்கள்
மதரஸா தெரு என்றே அழைத்து வருகின்றனர். முஸ்லிம்கள் கடிதம் எழுதும் போதும்,
வீடுகளிலும் மதரஸா தெரு என்றே எழுதுகின்றனர். அதோடு தேரழுந்தூர் என்பதை
தேரிழந்தூர் என்று எழுதுகின்றனர். அரபிக் கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் உள்ள
பெயர்ப்பலகைகளில் தேரிழந்தூர் என்றே எழுதியுள்ளனர்.
பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள அக்ரஹாரத்திலுள்ள பெரும்பான்மையான வீடுகளை
முஸ்லிம்கள் வாங்கிவிட்டனர். அழகு தமிழில் கம்ப ராமாயணமும், ஆழ்வார்
பாசுரங்களும் ஒலித்த வீடுகளில், அரபி மொழியில் குரான் வசனங்கள் கேட்கின்றன.
அக்ரஹாரங்கள் எப்படி முஸ்லிம்கள் வசமாகியது என்று அங்குள்ள ஒரு பெரியவரிடம்
விசாரித்தோம். அக்ரஹாரத்தில் ஒரு வீட்டை வாங்கிய முஸ்லிம்கள், அந்த வீட்டில்
மாமிசங்களைச் சமைத்து பக்கத்து வீட்டில் கொட்டுவார்களாம். எதிர்த்துக் கேட்டால்
அடிஉதைதான். தேரழுந்தூரில் ஹிந்துக்களை அக்ரஹாரத்திலிருந்து துரத்த வேறு ஒரு
மோசமான வழியையும் முஸ்லிம்கள் பின்பற்றியுள்ளனர். அக்ரஹாரத் தெருவில் பெண்கள்
வெளியே வரும் நேரங்களில் முஸ்லிம் இளைஞர்கள் நிர்வாணமாக நிற்பார்களாம்.
முஸ்லிம்களின் இந்த அட்டூழியங்களுக்குப் பயந்து அவர்களுக்கே வீட்டை
விற்றுவிட்டு வெளியூர்களில் குடியேறிவிட்டனர். இன்று பெருமாள் கோயிலில் பூஜை
செய்யும் ஓரிரு குடும்பங்களைத் தவிர அக்ரஹாரத்தில் ஹிந்துக்களே இல்லை.
நாங்கள் `விஜயபாரத'த்திற்காக அங்கு சென்ற போது அக்ரஹாரத் தெருவில் பெருமாள்
கோயிலுக்கு அருகில் ஒரு முஸ்லிம் வீட்டில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.
அருகில் சென்றபோது அசைவ வாசனை மூக்கைத் துளைத்தது. அங்கிருந்த முஸ்லிம்
பெரியவர் ஒருவரிடம் என்ன விசேஷம் என்று மெதுவாக பேச்சுக் கொடுத்தோம்.அந்த
வீட்டில் திருமண விருந்து நடப்பதாகக் கூறிய அவர் விருந்தில் ஆடு, மாடு, கோழி,
மீன்,
முட்டை என எல்லாம் உண்டு என்று பெருமையுடன் கூறினார். நாங்கள் பெருமாள்
கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக நிற்கும்போதும் அசைவ வாசனை நம் நாசிகளைப் பதம்
பார்த்தது.

பெருமாள் கோயிலுக்கு வந்திருந்த உள்ளூர்வாசி ஒருவரிடம், "கோயிலுக்குப்
பக்கத்தில் அசைவ விருந்து நடக்கிறதே, நீங்கள் தட்டிக் கேட்கக் கூடாதா?"
என்றோம். நம்மை மேலும் கீழும் பார்த்தவர், "நீங்கள் வெளியூரா" என்று
கேட்டுவிட்டு, "முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவெல்லாம் ஹிந்துக்களுக்குப்
போயாச்சு. இங்கு அவர்கள்தான் மெஜாரிட்டி. அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது.
ஏன் பேசக் கூட முடியாது" என்று அடுத்த நாட்டிலிருந்து உயிர் பிழைக்க ஓடி வந்த
அகதி போல புலம்ப ஆரம்பித்து விட்டார்.
இன்றும் தமிழ் செல்வாக்கோடு இருக்கிறதென்றால் அதற்கு காரணம் கம்பர்தான்.
ராமனையும், சீதையையும், அனுமனையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தியவர்
கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான். கம்பரின் சுவடு தொட்டு பாட்டெழுதாத தமிழ்ப்
புலவர்களே இல்லை என்று சொல்லலாம். தமிழ், தமிழ் என முழங்கும் தமிழினத்
தலைவர்களும், உலக தமிழினத் தலைவர் என போஸ்டர் அடித்துக் கொள்பவர்களும்
ஒருமுறையாவது கம்பர் பிறந்த தேரழுந்தூருக்குச் சென்று அங்கு தமிழுக்கும்
கம்பனுக்கும் இழைக்கப்படும் அநீதிகளையும் அவலங்களையும் பார்க்க வேண்டும்.
கம்பர்
பிறந்த இடம் வருவோர் போவோர் எல்லாம் மலம், சிறுநீர் கழிக்கும் இடமாக
இருப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். கம்பர் பிறந்த
இடத்தில் அவருக்கு நினைவிடம் எழுப்பி பராமரிக்க வேண்டும். அதோடு கம்பர் வழிபட்ட
பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவை மதரஸா தெரு என்று மாற்ற
முயற்சிக்கும் முஸ்லிம்களின் சதித்திட்டத்தைத் தடுக்க வேண்டும். இல்லையெனில்
தமிழ்த்தாய் நம்மை மன்னிக்க மாட்டாள்!

Anonymous said...

இது நீங்கள் கண்டு களிக்க அல்ல
ஒரு மாமேதைக்கு இங்கு கிடைத்த மரியாதையை கண்டு கொதிக்க!!!!
தன் வீட்டினில் பிறந்த பூனைகளிடத்தும் ஒற்றுமை பாடிய என் முண்டாசுக்கவிக்கு
தமிழன் என்பதற்காக இந்த மூடர்கள் செய்த செயலை பாரீர்!!!

எட்டயபுரத்தில் உதித்து சமூகநீதிக்காக உழைத்த எம் முண்டாசு கவி கடவுளின் சபையில் வைக்கப்பட்டுள்ளதை இந்த மூடர்கள் அறியாதது வருத்தமில்லை, பாரதி பிறந்த நாட்டினில் தான் இந்த மூடர்கள் பிறந்தார்கள் என்பதே வருந்தற்குரியது.

இங்ஙனம் நாம் அறிவது யாதெனில், மொழியின் அடையாளத்தின் பெயரால் இவர்கள் செய்த இழி செயலையோ, உயர்ந்ததென மெச்சிகொள்ளும் இவர்கள் நாகரிகத்தையோ அல்ல. இன்னும் ஆதி கால மனிதனை போலவே வாழும் இவர்களுக்கு, அறியாமையில் இருந்து விடுபெற ஞானபீடத்தை மட்டும் அல்ல அன்றாட சுகாதார தேவையான கழிபிடதைகூட அடையலாம் காண அவர்கள் நாட வேண்டியிருப்பது எம் குல மாணிக்கத்தை தான் என்பதை.

எட்டயபுரத்து பகலவனின் புகழை ஒருபோதும் எவராலும் ஒடுக்க முடியாது. அதன் சுடர் அண்டகளின் எல்லைகளையும் கடந்து பிரகாசிக்கும்.